என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
கடந்த 25 வருடங்களுக்கு முன், மலையாளத்தில் 'டாடி' மற்றும் 'தேவராகம்' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்தநிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும், 'ஓட்டு' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழி படமாக தயாராக இருக்கிறது.
இந்த படத்தை பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் நாயகியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், இந்தப்படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் கோவாவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.