சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் |
மலையாளத்தில் த்ரிஷ்யம்-2 வெற்றி பெற்ற கையோடு, தெலுங்கிலும் அதன் ரீமேக்கை துவங்கிவிட்டார்கள். தெலுங்கில் முதல் பாகத்தை இயக்கிய நடிகை ஸ்ரீப்ரியா, தற்போது தேர்தல் களத்தில் பிஸியாகி விட்டதால், இந்தமுறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்குகிறார். வெங்கடேஷ், மீனா, நதியா, எஸ்தர் அனில் என முதல் பாகத்தில் இருந்தவர்கள் அப்படியே இதிலும் தொடர்கிறார்கள்.
ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில், படம் முழுதும் வருகின்ற, மலையாளத்தில் முரளிகோபி என்பவர் நடித்திருந்த, ஸ்ட்ரிக்ட்டான ஐஜி கதாபாத்திரத்தில், நடிகர் ராணா நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என அவர் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில், வில்லன் நடிகர் சம்பத் நடித்து வருகிறார். த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் சம்பத், தற்போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.