'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த வருடம் வெளியான 'அல வைகுந்தபுரம்லோ' படத்தின் மூலம் இளைஞர்களை கிறங்கடித்த பூஜா ஹெக்டே, குறிப்பாக அதில் இடம்பெற்ற 'புட்டபொம்மா' பாடலின் மூலம் குழந்தைகளையும் கவர்ந்தார். அந்தப்படத்தில் அவர் அணிந்து நடித்திருந்த உடைகள் எல்லாமே அவரை மேலும் அழகாக்கி காட்டின. இந்த உடைகள் குறித்தும், அல வைகுண்டபுரம்லோ படக்குழுவினரிடம் இருந்து, தன்னை தேடிவந்த எதிர்பாராத பரிசு குறித்தும் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
“இந்தப்படத்தில் நடித்தபோது என்னுடைய உடைகள் அனைத்தையும் ஒரு பெட்டியிலேயே வைத்து பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். நான் அந்த உடைகளை விரும்பி அணிந்தாலும், அவற்றில் ஒன்றைக்கூட எனது வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நான் பயன்படுத்திய சைக்கிள் மீது மட்டும் எனக்கு ரொம்பவே ஒட்டுதல் ஏற்பட்டது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்து நான் மும்பை சென்ற சில நாட்களிலேயே, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலமாக அந்த சைக்கிளை எனக்கே அனுப்பி வைத்துவிட்டனர். அந்தப்படத்தில் பணியாற்றியதன் ஞாபகார்த்தமாக இப்போது என் வீட்டை அலங்கரிக்கிறது அந்த சைக்கிள்” என கூறியுள்ளார் பூஜா ஹெக்டே..