
சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் விஜய் சேதுபதி?
வெள்ளித்திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் போதிலும், கமல் பாணியில் சில காலம் சின்னத்திரையிலும் தொகுப்பாளராக இருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை அவர் குக் விக் கோமாளி மாதிரியான சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறாராம். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதத்திற்கு அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வில்லத்தனத்திலேயே காமெடி கலந்து மிரட்டுபவர் என்பதால், நிச்சயம் இந்த நிகழ்ச்சியும் களை கட்டும் என எதிர்பார்க்கலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!