அதிகபட்ச கட்டணம் 450, கேளிக்கை வரி நீக்கம் : முதல்வருக்கு 10 அம்ச கோரிக்கையை வைத்த திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் | கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணித்த விஷால் | திரிஷ்யம் 3 : முதல் நாள் வசூல் 50 கோடி | திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் | திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி | ‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல் | தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்! | ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு! | 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் |

கடந்த 2006 ம் ஆண்டு அர்ஜூன் ஹீரோவாக நடித்த படம் வாத்தியார். ஏ.வெங்கடேஷ் இயக்கி இருந்த இப்படத்தை பழனிவேல் தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பின், ஏ.வெங்கடேஷும், பழனிவேலும் சேர்ந்து பணிபுரிய வில்லை.
இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து புதிய படத்தை உருவாக்குகின்றனர். இந்தப் படத்திற்கு ரஜினி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக விஜய் சத்யா நடிக்க, மனோ நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரஜினி படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர்.




