ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கியவர் என்று பேசப்பட்டவர் பிரவுதேவா. நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா 1994ல் வெளிவந்த 'இந்து' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இத்தனை வருடங்களாகவும் நாயகனாக நடித்துக் கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனாலும், அவர் நடித்துள்ள மூன்று படங்கள் எப்போது வெளியாகும் என தடுமாறி நின்று கொண்டிருக்கின்றன.
ஹிந்தியில் முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் இயக்குனராக இருந்தாலும் ஒரு நடிகராக தன்னுடைய படங்கள் உரிய காலத்தில் வெளியாக வேண்டும் என்பது அவருக்குத் தெரியாதா?.
அவர் நடித்து முடித்துள்ள 'யங் மங் சங்' படத்தின் டைட்டில் அறிமுகம் 2019ல் வெளியானது. அதற்குப் பிறகு படம் பற்றிய எந்த அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அடுத்து 'பொன்மாணிக்கவேல்' என்ற படத்தின் டீசர் 2019ம் ஆண்டிலும் டிரைலர் 2020ம் ஆண்டிலும் வெளியானது. மற்றொரு படமான 'தேள்' என்ற படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிவடைந்து அப்படியே நிற்கிறது.
இந்த மூன்று படங்கள் அல்லாமல் 'பாகீரா, ஊமை விழிகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. எத்தனையோ படங்கள் வெளிவராமல் தவிப்பதற்கும் முன்னணி நடிகர், இயக்குனரான பிரபுதேவாவின் படங்கள் தவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.