இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் தற்போது அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் 'பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்' உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் 'ரிபப்ளிக், டக் ஜகதீஷ், அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த கொரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் ஆரம்பமானதும் பல நடிகைகள் சுற்றுலா சென்ற ஒரே நாடு மாலத் தீவு. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் நடிகைகள் என பலரும் தொடர்ந்து கணவர், காதலர், குடும்பத்தினருடன் அங்கு சுற்றுலா சென்றனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் தன்னுடைய சுற்றுலா குறித்து அடிக்கடி விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். தொடர்ச்சியான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பது நடிகர், நடிகைகளுக்கு ஒரு புத்துணர்வைத் தரும். பெரும்பாலான மாலத்தீவு சுற்றுலாக்கள் ஸ்பான்சர் செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள். அதனால்தான், பலரும் அடிக்கடி அங்கு செல்கிறார்களாம்.