மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. விபிஎப் கட்டண விவகாரம், ஆன்லைன் முன்பதிவுக் கட்டண விவகாரம், பைரசி இணையதளங்கள் என பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சினகளால் சுழன்று கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வருட காலமாக கொரோனா தாக்கத்தால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாமல் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து சினிமாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சிக்காமல் தயாரிப்பாளர் சங்கங்கள் தற்போது மோதல் போக்கைக் கையில் எடுத்துள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குக் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம். அதற்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதன் காரணமாக இரண்டு சங்கங்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
திரையுலகில் உள்ள மற்ற சங்கங்களில் முக்கிய சங்கமான நடிகர் சங்கமும் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் நடந்து முடிந்தும் வாக்கு எண்ணிக்கை நடக்காமல் இருக்கிறது. மற்றொரு சங்கமான தயாரிப்பாளர் சங்கத்திலும் எப்போதும் மோதல் போக்கே நிலவுகிறது. இந்த இரண்டு சங்கத்திலும் நடக்கும் விஷயங்களால் தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.
ஆனால், மூத்த உறுப்பினர்களோ நமக்கு என்ன வந்தது என ஒதுங்கியே இருப்பதாக மற்றவர்கள் கவலைப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லா சங்கத்திலும் அரசியல் நுழைவதே அதற்கு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த சினிமா பிரமுகர் ஒருவர்.