பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் விதமாக “மாஜா” என்ற தளத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ளார். இதில் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) என்ற பாடல், பிரபல பாடகி தீ குரலில் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது.
தீ கூறுகையில், ஒரு நிகழ்வில் பேசுவதற்கு எந்தவித தயாரிப்பும் இல்லாமல் வரும் ஆட்களில் நானும் ஒருவர். தென்னிந்தியாவின் திறமைமிக்க சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க, புதிய தளத்தை அறிமுகப்படுத்திய மாஜாவுக்கு நன்றி. அமித்தின் (Studio MOCA) அற்புதமான வேலைக்கு நன்றி. உலகின் சிறந்த கலைஞர்களில் ஒருவர் அறிவு. என் தந்தை என்பதை விட, மற்றொரு கலைஞராக சந்தோஷ் நாராயணன் உடன் பணியாற்றுவதில் நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த பாடல் பா.ரஞ்சித்தின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. என் அம்மா தான் என் கடவுள். என்னை ஒரு கலைஞராக்குவதில் அவர் பெரும் அர்ப்பணிப்பை தந்துள்ளார் என்கிறார்.
பாடலாசிரியர் அறிவு கூறுகையில், ஒரு சுயாதீன கலைஞரின் வாழ்கை எப்பொழுதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளான ரசிகர்களுடன் முடிந்துவிடும். ஆனால் இன்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது, எனது பாடல் மிகப்பெரும் வெளியீட்டு நிகழ்வில் வெளியாகிறது. இப்படியான தளத்தை உருவாக்கிய மாஜாவிற்கும், இதன் மேற்பார்வையாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி. சந்தோஷ் நாராயணன் ஒரு அரசியல் இசையமைப்பாளர், அவர் ஒரு பாடலை சாதாரணமாக இசையமைக்கமாட்டார். மிகவும் ஆழமாக சென்று, அதன் அடிநாதத்தை கண்டறிந்து இசையமைப்பார் என்றார்.
இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர்கள் மணிகண்டன், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ், சுதா கொங்குரா, இசையமைப்பாளர்கள் தேவா, சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.