இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தமிழ் சினிமாவில் இதுவரை லட்சக்கணக்கான பாடல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பல்லாயிரம் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன. அந்த பாடல்களுக்கெல்லாம் கிடைக்காத பெருமை இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடலுக்குக் கிடைத்தது.
யு டியூபில் 2019ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி வெளியான இப்பாடல் தற்போது அடுத்த சாதனையாக 1100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இப்பாடல் 1000 மில்லியன் சாதனையைக் கடந்தது. அடுத்த நான்கு மாதங்களுக்குள் மேலும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று இப்போது 1100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.
1000 மில்லியனைக் கடந்த பிறகும் இப்பாடல் சராசரியாக ஒரு நாளைக்கு 8 லட்சம் பார்வைகளைப் பெற்று விடுகிறது. இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் இன்னும் நான்கு மாதங்களுக்குள் மேலும் 400 மில்லியன் பார்வைகளைப் பெற்று 1500 மில்லியன் சாதனையைப் படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்பாடலுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக பாடல் யு டியூபில் வெளியான நாளன்று 63 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.கடந்த இரண்டு வருடங்களாக இப்பாடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான ஒரு தகவல்தான்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி, தீயுடன் இணைந்து பாடிய பாடல் 'ரவுடி பேபி'. திரையில் தனுஷ், சாய் பல்லவியின் அசத்தலான நடனமும் இப்பாடல் இந்த அளவிற்கு சாதனை புரிய காரணமாக அமைந்துள்ளது.