தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' |

கும்கி படத்திற்கு பிறகு மீண்டும் யானையை மையமாகக் கொண்ட கதையில் பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் காடன். தமிழ், தெலுங்கு. ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாகுபலி வில்லன் ராணா நாயகனாக நடிக்க, விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யானைகளின் வீடான காட்டை அழித்து மனிதர்கள் கட்டிடங்கள் கட்டுவதும், யானைகளின் காட்டை பாதுகாக்க ராணா கடுமையாக போராடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியாக இருப்பதாக அப்போதே படக்குழு அறிவித்திருந்தது. அதையடுத்து கொரோனா தொற்று காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மார்ச் 26-ந்தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காடன் டிரைலர் மூன்றே நாட்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்திருக்கிறது.