குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். படம் குறித்து இருவித விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவு பற்றி பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பது நீரவ்ஷாவின் உதவியாளர் ஏ.ஆர்.அசோக்குமார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்கு உதவியாளராக பணியாற்றி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி 2 படங்களுக்கு உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படங்களில் அசோக்குமாரின் திறமையை பார்த்த இயக்குனர் பிரபு சாலமன், காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.
அசோக்குமார் கூறியதாவது: என்னை நம்பி காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் மிகப்பெரிய நன்றிகள். முதல் படமே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி. நான் அறிமுக ஒளிப்பதிவாளர் என்று பார்க்காமல், நடிகர்கள் ராணா மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் என்னுடன் நட்பாக பழகியது என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள்.
காடன் படத்திற்காக தாய்லாந்து, புனே, கேரளா வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சிறந்த அனுபவமாக இருந்தது. முழு படத்தையும் பார்த்த படக்குழுவினர், பொதுமக்கள் அனைவரும் என்னை பாராட்டியது சந்தோஷமாக இருந்தது. குறிப்பாக ராணா, விஷ்ணு விஷால், இயக்குனர் பிரபு சாலமன் ஆகியோர் பாராட்டில் மெய் சிலிர்த்து போனேன். இவர்களின் பாராட்டு இன்னும் உத்வேகத்துடன் பணியாற்ற உற்சாகப்படுத்தி இருக்கிறது.
தற்போது, சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சீனு ராமசாமி சகோதரர் இயக்கத்தில் திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் அழகிய கண்ணே படத்தில் பணியாற்றி வருகிறேன் என்றார்.