தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி இருவருக்கும் இடையில் இருந்து கொண்டு அவர்களுக்கு நிகரான வெற்றியையும், வசூலையும் கொடுத்தவர் ராமராஜன். இன்று வரை நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற உறுதியோடு இருக்கிறார்.
சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் வந்துவிட்ட அவர் வாழ்வில் நிறைய ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டார். சமீபத்தில் அவரை கொரோனா தாக்கியது. அதன் கொடூர பிடியில் இருந்தும் தப்பி வந்து விட்டார். இப்போது அவர் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக திரைக்கதை எழுதும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ராமஜான் மீண்டும் இயக்குனராக களம் இறங்குகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛நான் ஹீரோவாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை இயக்கி இருக்கிறேன். 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும். சினிமாவில் பெண்களை மதித்தவன். அதுபோல் அரசியலில் நான் கடைசி வரை ஜெயலலிதா அம்மாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன'' என்கிறார் ராமராஜன்.