தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை | எங்க வீட்டுப் பிள்ளை, ஆட்டோகிராப், மாமன் - ஞாயிறு திரைப்படங்கள் | கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' |

தமிழ் சினிமாவில் இன்றைய இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் செல்வராகவன். 2003ம் ஆண்டு வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதற்கு முன்பாக அவருடைய அப்பா கஸ்தூரிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். தனுஷ் நாயகனாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
தம்பி தனுஷை தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மாற்றியதில் அண்ணன் செல்வராகவனுக்குத்தான் முக்கிய பங்குண்டு. அடுத்தடுத்து விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட சில படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன்.
தற்போது 'சாணி காயிதம்' படத்தின் மூலம் நடிகராகவும் மாறியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்வது குறித்து செல்வராகவன் டுவீட் செய்திருக்கிறார்.
“23 வருடங்களாக திரைப்பட உருவாக்கத்தில்....இன்று முதல் ஒரு நடிகராகவும்...என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணி காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.




