ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
நயன்தாரா நடித்த மாயா, டாப்சி நடித்த கேம் ஓவர் படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். 2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் இறவாக்காலம். மெர்சல் படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்தைத் தயாரித்து முடித்துவிட்டது தேனாண்டாள் நிறுவனம்.
ஆனால், மெர்சல் படத்துக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்தப் படம் இப்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் தன் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் போலி ஐடியைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின் சரவணன்.
அவர் தனது பதிவில் , எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன்.
நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, அஷ்வின் மாயா இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை கொடுத்ததாகவும், திரைப்பட வாய்ப்புக்காக தவறிழைக்க அழைத்ததாகவும் தெரிய வருகிறது.
எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எந்தவிதமான நடிகர்-நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை. எனவே, இத்தகைய நபர்களிடம் உரையாடலை தொடங்கும் முன் அவர்கள் பின்னணி குறித்து தீர ஆராயுமாறு அனைத்து நடிகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய திரைப்படங்களுக்காக எதிர்காலத்தில் நடிகர்-நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேடுதலில் நான் ஈடுபட்டால், அவர்களை முறையாக என்னுடைய குழுவோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களோ அணுகுவார்கள்.மேற்கண்ட நபர் குறித்து காவல் துறையில் புகாரளிப்பதற்காக எனது வழக்கறிஞர் குழுவிடம் நான் தொடர்பு கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை அறிக்கையாகவும் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி உள்ளார்.