ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்காக புதிதாக, 'மாஜ்ஜா' என்ற பெயரில், இசை நிறுவனத்தை ஏ.ஆர்.ரகுமான் துவக்கியுள்ளார். சென்னையில் விரைவில், 'யாழ்' என்ற, இசை திருவிழாவையும், அவர் நடத்த உள்ளார்.
கிராமி மற்றும் ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்; புதிய முயற்சியாக தொழில்நுட்பம் சார்ந்து, 'மாஜ்ஜா' என்ற, புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார். அடுத்த தலைமுறை இசை கலைஞர்களின் திறன்மிகு படைப்புகளை, உலகளவில் கொண்டு செல்வதை குறிக்கோளாக கொண்டு, இதை ஆரம்பித்துள்ளார்.அத்துடன், யாழ் இசை திருவிழா வாயிலாக, இளம் திறமையாளர்களையும் வெளிப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:மாஜ்ஜா நிறுவனம், சுயாதீன இசை முயற்சிகளுக்கான மேடையாக இருக்கும். படைப்பு சுதந்திரத்தின் முழுமையை அளிப்பதுடன், திறமையாளர்களை உலகளவில் எடுத்து செல்வதே, இதன் குறிக்கோள்.திறமையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள், எந்த ஒரு அடையாளமும் வெளிப்படாமலேயே, காணாமல் போய்விடுகின்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், திறமையானவர்களுக்கான தடைகள் உடைக்கப்படும். தொழில் நுட்பத்தால் இசைக்கலைஞர்களுக்கு புது யுகம் படைப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.