சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியவர் அட்லி. இந்த படங்கள் வெளியான நேரத்தில் ஏற்கனவே வெளியான ஹிட் படங்களின் பாதிப்பு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தபோதும் படங்களின் வசூல் பாதிக்கவில்லை.
இந்நிலையில், பிகில் படத்தை அடுத்து ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக கூறி வந்தார் அட்லி. ஆனால் அதுகுறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இப்படியான நிலையில், தற்போது நெல்சன் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடிக்க தயாராகி வரும் விஜய், அடுத்து அவரின் 66ஆவது படத்தை தயாரிக்க தேனாண்டாள் பிலிம்ஸ் முன்வந்துள்ளதாம்.
ஆனால் அப்படம் குறித்து விஜய்யிடத்தில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அந்த படத்தை இயக்க அட்லியை ஒப்பந்தம் செய்யுமாறு கூறியிருக்கிறார். ஆனால் தேனாண்டாள் பிலிம்சோ வேறு இயக்குனர் ஒருவரை வைத்துதான் அந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார்களாம். ஆனால் இப்போது விஜய்யே அட்லியின் பெயரை முன்மொழிந்து விட்டதால், விஜய்யின் 66ஆவது படத்தை அட்லி தான் இயக்குவார் என தெரிகிறது.