துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் உருவான படம் கிரேட் இந்தியன் கிச்சன். இப்படம் கடந்த ஜனவரி15-ந்தேதி ஓடிடியில் வெளியானது. ஆணாதிக்கத்திற்கு எதிராக ஒரு படித்த பெண் போராடும் கதையில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆர்.கண்ணன் இப்படத்தை தமிழ்-தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதையடுத்து தற்போது கிரேட் இந்தியன் ரீமேக் படத்தில் நிமிஷா சஜயன் நடித்திருந்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காக்கா முட்டை, கனா, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருந்ததாலும், தமிழ், தெலுங்கில் இவர் பிரபலம் என்பதாலும் இந்த வேடத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளாராம் கண்ணன்.