செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
கன்னடத்தில் 2016ல் வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். அடுத்து அவரை தங்களது படங்களிலும் நாயகியாக நடிக்க வைக்க சில முன்னணி நடிகர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், ராஷ்மிகாவின் டார்க்கெட்டோ பாலிவுட்டை நோக்கி இருக்கிறது.
தற்போது ஹிந்தியில் 'மிஷன் மஜ்னு' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்து அமிதாப்பச்சன் நடிக்கும் 'டெட்லி' படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா நடித்த ஹிந்தி ஆல்பமான 'டாப் டக்கர்' வீடியோ 5 கோடி பார்வைகளை நெருங்க உள்ளது. இதனால் ராஷ்மிகா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
தெலுங்கைப் போலவே ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என முயற்சித்து வருகிறாராம். இதனால், தற்போது மும்பையில் சொந்தமாக விலை உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளாராம். ஹைதராபாத்திலும் இது போலவே ஒரு பிளாட்டை ஏற்கெனவே வாங்கியுள்ளார் ராஷ்மிகா.
அதனால், இனி தமிழ்ப் படங்களில் நடிக்க ராஷ்மிகா ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.