ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 பட வேலைகள் ஆரம்பமானதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியது. கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அடுத்து கொரோனா பிரச்சினை தலைதூக்க படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியானது.
இதற்கிடையே பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கிய கமல், அடுத்து தேர்தல் வேலைகளில் பிசியாகி விட்டார். இதனால் இப்போதைக்கு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாகாது என்பது உறுதியாகி விட்டது.
இதனால் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பிரமாண்டமான படத்தை இயக்க இருக்கிறார் ஷங்கர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர்கள் தில்ராஜு, சிரிஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
ஷங்கரும் அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்து விட்டதால் இந்தியன் 2 படம் டிராப் ஆவதாக சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலானது. ரசிகர்கள் மத்தியில் காரசார விவாதமும் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தியன் 2 படம் பற்றி ஷங்கர் பேசியுள்ளார். அதில், “ராம்சரண் படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும். அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும். தேர்தல் பணிகள் முடிவடைந்ததும், 'இந்தியன்-2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும். அதில் கமல் கலந்துகொண்டு நடிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.




