3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்தநிலையில் விஜய்யின் 66ஆவது படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டிக் கோதாவில் குதித்திருப்பதாக கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அப்படி விஜய்யிடம் கால்சீட் கேட்டு துரத்துபவர்களில் அவரது மகனான சஞ்சய்யும் ஒருவராம்.
கனடா நாட்டில் டைரக்ஷன் கோர்ஸ் படித்துள்ள சஞ்சய் ஏற்கனவே சில குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார். அடுத்தபடியாக தனது தந்தை விஜய்யை மனதில் கொண்டு ஒரு அருமையான ஸ்கிரிப்டோடு அவரது கால்சீட்டுக்காக சஞ்சய்யும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறாராம்.
அதனால் விஜய்யின் அடுத்த படம் அவரது மகன் கூட்டணியில் கூட இருக்க வாய்ப்பிருப்பதாக விஜய் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் வழியில் அடுத்து சஞ்சய் களமிறங்குவார் என்று பார்த்தால், அவரோ தாத்தா எஸ்.ஏ.சியின் வழியில் இயக்குனராக களமிறங்குவார் போல் தெரிகிறது.