'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2015ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாள படமான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டின். இந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமானார்கள். மடோனாவும் குறிப்பிடத்தக்க நடிகை ஆனார்.
விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்த போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கவன், தனுசுடன் பவர் பாண்டி, ஜுங்கா , வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது கொம்புவச்ச சிங்கம்டா என்ற தமிழ் படத்திலும் கொட்டிகோபா என்ற கன்னட படத்திலும், ஷியாம் சிங்கராய் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது காதலரை இன்ஸ்ட்ராகிராம் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார் மடோனா. அவரது காதலரின் பெயர் ராபி ஆபிரஹாம். இவர் தமிழில் நேரம், மலையாளத்தில் ஓம் சாந்தி ஓஷனா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் உள்ளார்
இவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு “உன்னை சந்தித்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது, உன்னோடு சேர்ந்து இருப்பதை மிக நல்ல தருணங்களாக கருதுகிறேன் " என்று எழுதியிருக்கிறார். மடோனாவின் காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.