நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.
இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் பணிபுரிவது குறித்து சமந்தா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். அது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது : “வலிமையான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களுடன் இணைந்து நடிப்பது எவ்வளவு சந்தோஷமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் என நிச்சயமாகச் சொல்வேன். இந்தப் பார்ட்டியை அசத்திக் கொண்டிருக்கிறீர்கள் விக்னேஷ் சிவன்,” என பாராட்டித் தள்ளுகிறார் சமந்தா.