மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
ஜான்சன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், அனைகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தார் படத்தின் இயக்குனர் ஜான்சன். மேடையில் பேசும் போது அடிக்கடி 'நான் வொர்த்தே இல்லை' என்ற வார்த்தையை அடிக்கடி கூறி ஏதேதோ உளறினார். அவர் பேசியது எதுவுமே பத்திரிகையாளர்களுக்குப் புரியவில்லை.
ஒரு கட்டத்தில் இந்தப் படமும் வொர்த் இல்லை என்று வேறு பேசி அதிர்ச்சியைக் கொடுத்தார். படத்தில் என்னைத் தவிர அனைவரும் வொர்த் ஆனவர்கள் தான் என்றார்.
படத்தை முடித்த உடன் அவருக்கும், சந்தானத்திற்கும் ஏதோ பிரச்சினை நடந்திருக்கிறது. ' வொர்த் இல்லை' என்ற வசனத்தை சந்தானத்தின் படங்களில் அடிக்கடிப் பார்க்கலாம். அதனால், அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு அவர் இயக்குனரைத் திட்டியிருக்கலாம் என்கிறார்கள். அதனால்தான், மேடையில் அந்த வார்த்தையை அவர் அடிக்கடி பயன்படுத்தி இருக்கிறார்.
ஜான்சன் இயக்குனராக அறிமுகமான சந்தானம் நடித்த 'ஏ 1' படமும் வெற்றி பெற்ற படம்தான். இந்த 'பாரிஸ் ஜெயராஜ்' படமும் நன்றாக வந்திருப்பதாகவே தெரிவிக்கிறார்கள். அப்படியிருக்க இயக்குனர் எப்படிப்பட்ட மன உளைச்சலில் அப்படி பேசியிருப்பார் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. நேற்றைய பிரஸ் மீட்டில் அவர் 'போதை'யுடன் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு வழியாக அவரை சந்தானம் அமைதிப்படுத்தி அவரை உட்கார வைத்தார்.
இயக்குனர் ஜான்சன் உளறிக் கொட்டிய பேச்சின் வீடியோ நேற்று யு டியுபில் பரபரப்பை ஏற்படுத்தியது. என்னதான் பிரச்சினை இருந்தாலும் தான் சம்பந்தப்பட்ட படத்தின் நிகழ்ச்சிக்கு ஒரு இயக்குனர் அப்படி வந்தது மாபெரும் தவறு என திரையுலகத்திலேயே தெரிவிக்கிறார்கள்.