ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயின் ஆனவர் மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு சத்ரியன், தேவராட்டம், படத்தில் நடித்தார். தமிழில் அறிமுகமான 5 ஆண்டுகளில் 5 படங்களில் தான் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான களத்தில் சந்திப்போம் அவருக்கு அடுத்த அடையாளமாக அமைந்துள்ளது. இதுதவிர விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 படங்களில் கமிட்டாகி தமிழில் பிசியாகி வருகிறார்.
இது குறித்து மஞ்சிமா மோகன் கூறியதாவது: என்னிடம் களத்தில் சந்திப்போம் படத்தின் கதையை கூறியபோதே என் கதாப்பாத்திரம் நன்றாக வருமென்கிற நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பில் அந்த நம்பிக்கை பன்மடங்கு பெருகியது. தற்போது படத்திற்கும், எனது நடிப்பிற்கும் ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்களும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
தற்போது குயின் படத்தின் மலையாள ரீமேக்கான ஜாம் ஜாம், விஷ்ணு விஷால் நடிக்கும் எப்ஐஆர், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படங்களில் நடித்து வருகிறேன். ஒப்பந்தமாகியுள்ள மேலும் சில படங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன. என்றார்.