டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கும் படம் WWW (Who, Where, Why). இதில் ஆதித் அருண் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். தெலுங்கில் அறிமுகமான ஷிவானி தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
இது குறித்து இயக்குனர் கே.வி.குகன் கூறியதாவது: படத்தின் டீஸரை, விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் கூறினார்.
நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப்படத்தில் அவரது நடிப்பை காண ஆவலாக இருப்பதாக கூறினார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.