2022 அரையாண்டு கூகுள் தேடல் : 22வது இடத்தில் விஜய் | மீண்டும் ஒரு 'சூர்ய வம்சம்' : சரத்குமார் நம்பிக்கை | 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான இளையராஜா படங்கள் | சந்திரமுகி 2 படத்தில் திரிஷா? | ரத்தம் படத்திற்காக உருவாகும் சிறப்பு பாடல் காட்சி | அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான் | கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம் | ருத்ரன் படத்திற்காக 10 கிலோ எடை கூடிய லாரன்ஸ் | பிரபாஸின் சலார் படத்தில் நடிக்க பிருத்விராஜ் போட்ட கண்டிஷன் | பாயும் ஒளி நீ எனக்கு டீசர் வெளியீடு |
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் சுமார் எட்டு மாத காலம் மூடப்பட்டு பின் திறக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வரவில்லை. அதையெல்லாம் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவரும் போது மாற்றும் என்று நம்பினார்கள், அதன்படியே நடந்தது. கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்தது. அதற்கடுத்து சிம்பு, நிதி அகர்வால் நடித்த 'ஈஸ்வரன்' படம் ஜனவரி 14ம் தேதி வெளிவந்தது.
இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். 'மாஸ்டர்' படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து படம் பெரிய வசூலையும் பெற்றது. ஆனால், 'ஈஸ்வரன்' படத்திற்கு அப்படியே குறைந்து போனது. எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை.
இருந்தாலும் இரண்டு படங்களும் தற்போது 25வது நாளைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளிவந்த பின்னும் கடந்த பத்து நாட்களாக தியேட்டர்களில் ஓடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இரண்டு படங்கள் இந்த ஆண்டில் 25வது நாளைக் கடந்துள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.