ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா |

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.
இப்படம் முடிவடைந்து சில வருடங்கள் ஆகியும், சில காரணங்களால் வெளியாகாமலேயே இருந்தது. படத்தை வெளியிடும் முயற்சியில் அதன் தயாரிப்பாளர்கள் கடந்த வருடக் கடைசியில் இருந்து தீவிரமாக இறங்கினர்.
தற்போது அதற்கு விடிவு காலம் கிடைத்துவிட்டது. மார்ச் 5ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
“உங்கள் பொறுமைக்கு நன்றி” என செல்வராகவன் இது குறித்து டுவீட் செய்துள்ளார்.
“கடவுள் இந்தப் படத்திற்காக சரியான திட்டம் ஒன்றை வைத்திருப்பார் என்பதை நம்பினேன். கடவுளுக்கு, எனது அம்மாவுக்கு, அப்பாவுக்கு, நன்றி. செல்வராகவன் சார், யுவன் ஆகியோரது ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி,” என எஸ்ஜே சூர்யா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட தாமதத்திற்கப் பிறகு இப்படம் வெளிவந்தாலும் செல்வராகவன், யுவன் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.