பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். 9 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வெளிவந்த 'மெரினா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தனுஷ் நடித்த '3' படத்தில் அவரது நண்பனாக நடித்திருந்தாலும் தனக்கான பாதை ஹீரோ தான் என்பதை முடிவு செய்து அடுத்த படத்திலிருந்தே தன்னை நாயகனாக மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.
2013ம் ஆண்டு வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மாபெரும் வெற்றி சிவகார்த்திகேயனை அப்படியே முன்னணிக்குக் கொண்டு வந்தது. தொடர்ந்து வந்த 'மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன்' ஆகிய படங்கள் அவரை தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைத் தக்க வைக்க உதவியது.
அதன்பின் அவர் நடித்து வெளிவந்த 'ரெமோ, வேலைக்காரன், சீமராஜா' மிகச் சுமாரான வெற்றி பெற்றாலும், பின்னர் வந்த 'மிஸ்டர் லோக்கல்' தோல்வியடைந்தாலும் அவற்றை 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் வெற்றி மாற்றியது. 'ஹீரோ' படத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் அடுத்து மார்ச் 26ல் வெளிவர உள்ள 'டாக்டர்' காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. அடுத்து 'அயலான், டான்' என தனது பாதையை திட்டமிட்டு பத்தாவது ஆண்டில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
எந்தவிதமான சினிமா பின்னணி இல்லாமல் தனது சுய திறமையால் முன்னேறி டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி, சினிமாவுக்குள்ளும் நுழைந்து அவர் பெற்றிருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.
திறமையும், முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு சினிமாவில் சிறந்த உதாரணம் சிவகார்த்திகேயன். அந்த நம்பிக்கை அடுத்த பல சிவகார்த்திகேயன்கள் சினிமாவை நோக்கி பயணிக்க காரணமாக அமைந்துள்ளது.