டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
தமிழ் சினிமாவில் இன்றைய இயக்குனர்களில் காதல் படங்களை காதல் ரசம் சொட்டச் சொட்ட இவரைத் தவிர வேறு யாரும் தரவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம் என்ற பெருமைக்குரியவர் கவுதம் மேனன்.
2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி கவுதம் மேனன் இயக்குனராக அறிமுகமாகிய 'மின்னலே' படம் வெளிவந்தது. அப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி படத்தை வெற்றி பெற வைத்தது.
அடுத்து கவுதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படம் இன்று வரையிலும் சிறந்த போலீஸ் திரைப்படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தன்னுடைய மூன்றாவது தமிழ்ப் படத்திலேயே கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு பெற்றார். அவரை வைத்து இயக்கிய 'வேட்டையாடு விளையாடு' படமும் வித்தியாசமான போலீஸ் ஆக்ஷன் படமாக அமைந்தது.
தொடர்ந்து அவர் இயக்கிய படங்களில் மிகச் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக 2010ல் வெளிவந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் அமைந்தது.
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படமும் போலீஸ் படம் தான். அப்படமும் வெற்றிப்படமாகவே அமைந்தது. அவர் கடைசியாக இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும், அதற்கு முன்னர் வெளிவந்த சில படங்கள் தோல்வியடைந்தாலும் இயக்குனராக தன் இமேஜை அவர் குறைத்துக் கொள்ளவில்லை.
தான் இயக்கும் படங்களை மிகவும் தாமதமாக வெளியிடுபவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. அதற்கு உதாரணம் தான் சில வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் 'துருவ நட்சத்திரம்'. அதோடு 'ஜோஷ்வா இமைபோல் காக்க' படமும் எப்போது வரும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருக்கும்.
இன்றைய சூழ்நிலையில் 20 ஆண்டுகளில் ஏற்ற இறக்கங்களுடன் கடந்தாலும் ரசிகர்கள் மனதில் தன் பெயரை நிலைக்க வைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. இடைவெளி இல்லாமல் தாமதம் இல்லாமல் படங்களைக் கொடுங்கள் கவுதம் மேனன் என்பதுதான் அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும்.