'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தியேட்டருக்கு 100 சதவிகித ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மாஸ்டர் ஓடிடியில் வெளியானது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தியேட்டருக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடிகிறது. என்றாலும் தொடர்ந்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
மாஸ்டர் படத்தின் லைசென்ஸ் பிப்ரவரி 4ம் தேதி ( நாளை) இரவு வரை தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆகையால் 4ம் தேதி இரவு வரை அனைத்துத் திரையரங்குகளுக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படும். வெள்ளிக்கிழமை முதல் யாரெல்லாம் படத்தைத் தொடர வேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்கள் எல்லாம் அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் பேசி புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
கபடதாரி திரைப்படம் 30 நாள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார். சிறிய பட்ஜெட் படங்கள் 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜெட் படங்கள் 50 நாட்களுக்கு பிறகும் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் விரைவில் பேச்சுவாத்தை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.