ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இப்போது 3 சங்கமாக உடைந்துள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு முரளி ராமசாமி தலைவராக இருக்கிறார். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதுதவிர தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு உஷா ராஜேந்தர் தலைவராக இருக்கிறார்.
அம்மா தலைவராக உள்ள சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு படத்தில் சம்பளம் பெறாமல் நடித்து கொடுக்க இருப்பதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் சிலம்பரசனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்குக் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்க வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்தப் படத்தை சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலன் தயாரிப்பார் என்பதையும், வானம் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ஞானகிரி இயக்குவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.