திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
கடந்த 2019ல் வெளியான மான்ஸ்டர் படம், ஒரு கதாநாயகனாக எஸ்.ஜே சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் அதற்கடுத்து படங்கள் வர ஆரம்பித்த நேரத்தில் தான், கொரோனா தாக்கம் குறுக்கிட்டு ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா கடமையை செய் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் இன்று நடைபெற்றது.
பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் இயக்குனர் சுந்தர்.சி நாயகனாக நடித்த 'முத்தின கத்திரிக்கா' என்ற படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் தான் இந்த படத்தை இயக்குகிறார்