புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என் ராசாவின் மனசிலே. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார்.
இது குறித்து ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி, இறை அருளால் இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் 25வது பிறந்த நாள்... "என் ராசாவின் மனசிலே" இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்... என தெரிவித்துள்ளார்.