ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு | வயதாவது, கடினமானது… 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷி சின்ஹா |
ஆன்லைன் சூதாட்டமான ரம்மி குறித்து தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
சீட்டாட்டம் என்பது, மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது. சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், "எல்லாமே என் ராசா தான்" என்று, ஒரு படமே எடுத்தேன்.
அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. "காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே" என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில், காவல் துறையைப் பற்றிய பயமில்லாமல், எல்லோரும் ஆடலாம் என்றாகி, இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன. தமிழக அரசு, இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டைத் தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.
தன்னிச்சையாக இந்தப்பிரச்சினையை கையிலெடுத்து, இந்த உயிர்பலி விளையாட்டை தடை செய்து, பொதுமக்களை காக்க வேண்டிய நீதி மன்றங்கள், இது, திறன் மேம்பாட்டு விளையாட்டு என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது, இல்லையெனில், இது அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட, மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறுவதாக, செய்திகள் வருகின்றன. இது, எதில் போய் முடியுமென்று தெரியவில்லை.
நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருப்பதோடு அதை நியாப்படுத்தி பேசி வருவதால் அவரை ராஜ்கிரண் மறைமுகமாக தாக்கி இருப்பதாக ராஜ்கிரணின் இந்த பதிவுக்கு நெட்டின்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.