நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அஜித் தற்போது பைக் சுற்றுப் பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தாய்லாந்து, கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி என பல இடங்களுக்கு பைக்கில் சுற்று பயணம் செய்தார். தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டு 6 மாதங்கள் மீண்டும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை அஜித் முடித்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு : "நடிகர் அஜித்குமார் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்திருப்பதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்ற திட்டத்தின் முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். மேலும், அவர் இந்தியாவில் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் அவருக்கு நிறைய அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது. அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்" என பதிவிட்டுள்ளார்.