சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
நடிகர் ராஜ்கிரண் தங்கள் மீது பொய் புகார் கொடுத்திருப்பதாக, அவரது வளர்ப்பு மகள் கூறியுள்ளார்.
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ப்ரியாவுக்கும், சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜாவுக்கும், சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ராஜ்கிரண் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. இதையடுத்து, 'ப்ரியா என் மகளே அல்ல' என ராஜ்கிரண் கூறினார்.
இதற்கிடையில், ரகசியமாக நடந்த ப்ரியா - முனீஸ்ராஜா திருமண காட்சி, தனியார் 'டிவி' நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை ஒளிபரப்ப, ராஜ்கிரண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அதனால், ராஜ்கிரண் தரப்பில் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் ப்ரியா குற்றஞ்சாட்டினார். ராஜ்கிரண் மீது புகார் கொடுக்கப் போவதாகவும் ப்ரியா கூறியுள்ளார்.
இந்நிலையில், அவரது கணவர் முனீஸ்ராஜா கூறியுள்ளதாவது: என் மனைவி ப்ரியாவை பெற்ற அப்பா, எங்களுடன் தான் இருக்கிறார். ப்ரியாவை பெற்ற தாயான பத்மஜா என்கிற கதீஜா, 18 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார். பின், கணவரை விட்டு பிரிந்த நிலையில் ராஜ்கிரணுடன் சேர்ந்தார். என் மனைவி சிறு குழந்தையாக இருந்ததால், உடன் அழைத்துச் சென்று விட்டார். அப்போது பத்மஜாவும், ப்ரியாவும் நிறைய நகைகள் போட்டு இருந்தனர். ராஜ்கிரண் தற்போது ப்ரியாவை மகளே இல்லை என கூறி விட்டார். ஆனால், அவரது நகைகளை மட்டும் கேட்கிறார். இது என்ன நியாயம்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் --