சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி |
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கட்டா குஸ்தி'. கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து அதன் உடன் மெசேஜ் சொல்லும் விதமாக இந்த படத்தை காமெடி படமாக உருவாக்கி உள்ளனர்.
தமிழ், தெலுங்கில் இந்த படம் இன்று (டிச., 2) வெளியாகி உள்ளது. படத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று படம் வெளியான நிலையில் மதுரை வந்திருந்த விஷ்ணு தனது மனைவி ஜூவாலா உடன் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்கள் பலரும் அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மதுரையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார் விஷ்ணு.