2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.
ராஜ்கிரண் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார் பிரியா. இதுதொடர்பாக பிரியா - முனீஸ்ராஜா தம்பதியர் மற்றும் ராஜ்கிரண் இடையே மாறி மாறி சண்டை, சர்ச்சைகள் எழுந்தன. போலீஸில் புகார்கள் எல்லாம் பதிவாகின. 'பிரியா என் மகளே அல்ல' என ராஜ்கிரண் கூறினார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பிரியா - முனீஸ்ராஜா பிரிந்துவிட்டனர்.

இதுதொடர்பாக பிரியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‛‛2022ல் நானும், முனீஸ்ராஜாவும் திருமணம் செய்தோம். இப்போது நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. என்னை வளர்த்த அப்பாவை(ராஜ்கிரண்) ரொம்ப காயப்படுத்தி விட்டேன். ஆனால் எனக்கு பிரச்னை வந்தபோது என்னை காப்பாற்றியது அவர் தான். இது நான் எதிர்பார்க்காத கருணை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.