பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் |

எஸ்.ஜே.சூர்யா தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படதில் நடிகை யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் 'ஸ்கூப்பர்' என்ற விநோத நோயால் பாதிக்கப்ட்ட நபராக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி வெளியாகிறது.