கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சின்னத்திரையில் புகழ் பெற்று மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்தவரான பிரியா பவானி சங்கர், தற்போது கமல், லாரன்ஸ், அருண் விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அதோடு தெலுங்கில் இவர் நடிக்கும் அகம் பிரமாஸ்மி என்ற படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது. இதனால் கூடிய சீக்கிரமே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விடுவார் பிரியா பவானி சங்கர்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ராஜ்வேல் என்பவரை காதலித்து வந்தார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலருடன் இருந்த ஒரு போட்டோவையும், இப்போதுள்ள ஒரு போட்டோவையும் பகிர்ந்து, ''2011, 2021. இந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். ஆனால் நமக்குள் உள்ள பிணைப்பு மட்டும் மாறவில்லை. எது நடந்தாலும் அது மாறாது. உனக்கு இந்த உலகத்தில் சிறந்த விஷயங்கள் கிடைக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.