புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதையடுத்து மாணிக்கம் உள்பட பல படங்களில் நடித்தார். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற பெயரில் ஒரு படத்தையும் தயாரித்தார். சமீபகாலமாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் யுடியூப் சேனல் நடத்தி வரும் வனிதா, மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்தார்.
இப்படியான நிலையில், தற்போது 40 வயதை எட்டியுள்ள வனிதா விஜயகுமாருக்கு 'அனல் காற்று' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கிய ஆதம் தாசன் இந்த படத்தை இயக்குகிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிமாகி வருகிறார் வனிதா.