லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள பார்ட்டி படம் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் வெப்சீரிஸ் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் இயக்கி முடித்துள்ள வெப் சீரிஸ் 'லைவ் டெலிகாஸ்ட்'.
இதில் காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி, டேனியல் அன்பே போப், சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், யோகிபாபு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரன் இசை அமைத்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது. வருகிற பிப்ரவரி 12ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஆக்ஷன் ஹாரர் வகை படம். இதில் காஜல் அகர்வால் பேயாக நடித்திருக்கிறார்.