‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் | லண்டனில் 1540 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்த ஆர்யா | பிரமாண்டமாக நடைபெறும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு | 'ஜகமே தந்திரம்' பற்றி 'கிரே மேன்' இயக்குனர்கள் கருத்து | ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் |
ஜோக்கர் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு, ஆண்தேவதை படங்களில் நடித்துள்ளார். பெரிய அளவில் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான படங்களை தொடர்ந்து வெளியிட்டு லைம் லைட்டிலேயே இருக்கிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் புகழ் வெளிச்சம் தந்துள்ளது.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார். தற்போது ரம்யா பாண்டியனுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.