மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக விளங்கியவர் சினேகா. அவரும், நடிகர் பிரசன்னாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். அருண் வைத்யநாதன் இயக்கிய 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 5 வயதில் விஹான் என்ற மகன் இருக்கிறான். கடந்த வருடம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ஆத்யாந்தா எனப் பெயரிட்டனர். இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் முதல் பிறந்தநாளை பிரசன்னா, சினேகா தம்பதியினர் கொண்டாடினர்.
அந்தப் புகைப்படங்களை சினேகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.