ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உண்மை, பொய் என அவர் பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் இருக்கிறார் என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். மற்றொரு ரசிகர் உங்களுக்கு இந்த ஆண்டு திருமணம்? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.
உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு தான் யாரையும் எப்போதும் வெறுப்பதில்லை என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.