சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
5 ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மலையாள நடிகை கனிகா. திருமணமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டாலும், பத்து வயதிற்கு மேல் உள்ள மகன் இருந்தாலும் எப்போதுமே உடற்பயிற்சிக்கும் தனது தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதனால் அவ்வப்போது மாடர்ன் உடை அணிந்து, தனது இளமை தோற்றத்துடன் கூடிய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனாலேயே அடிக்கடி விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தார்.
இந்தநிலையில் அரைக்கால் ஷார்ட்ஸ் மற்றும் பனியன் அணிந்த தனது புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் கனிகா. இதற்கு எந்த மாதிரி விமர்சனங்கள் எல்லாம் வரும் என உணர்ந்தவர் போல முன்கூட்டியே அதற்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம்.. நான் அம்மா தான்.. அதனால் என்ன..? நான் ஷார்ட்ஸ் அணிகிறேன். என் நண்பர்களுடன் வெளியே சுற்ற ஆசைப்படுகிறேன்.. என்னுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். என் மகனை நேசிக்கிறேன்.. எப்படிப்பட்ட பெற்றோராக இருக்க வேண்டும் என தாய்மைக்கு ரூல் புக் எதுவும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடும்ப சூழலும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.. தாய் என்பவளை அவளுடைய தோற்றத்தை வைத்து மட்டும் எடை போடாதீர்கள்” என சற்று காட்டமாகவே கூறியுள்ளார்.