அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ளவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் மாரி- 2வில் தனுஷுக்கு வில்லனாக நடித்தவர் இவர் தான். தற்போது கைவசம் 6 படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய டொவினோ தாமஸ், பிறந்தநாளில் புதிய முயற்சியாக 'டொவினோ தாமஸ் புரொடக்சன்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக அதாவது அவர் கடந்த நான்கு படங்களில், மற்ற தயாரிப்பாளர்களுடன் தன்னையும் இணை தயாரிப்பாளராக இணைத்து கொண்டிருந்தார்... அதன் காரணமாகத்தான் அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு எந்த தொய்வுமின்றி உடனுக்குடன் முடிவடைந்து வந்தது.. இந்தநிலையில் தான், தானே தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதில் தனது படங்கள் மட்டும் அல்லாமல், திறமையான கலைஞர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.