சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை |
ஜெய் நடித்துள்ள டிரிபிள்ஸ் வெப் சீரிஸ் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதவிர அவர் நடித்து முடித்துள்ள வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம் வெளிவர வேண்டி இருக்கிறது. வெற்றிச் செல்வன் இயக்கும் எண்ணி துணிக, பிரேக்கிங் நியூஸ் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஜெய், சுசீந்திரன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திண்டுக்கல் பகுதியை சுற்றி நடந்து வந்தது. இதில் ஒரு படத்திற்கு தற்போது குற்றமே குற்றம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஜெய் ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதுதவிர சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், பாரதிராஜா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்து விட்டு சிம்பு நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் சுசீந்திரன்.