''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் கடந்த வாரம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் கர்நாடகவிலும் இப்படம் தெலுங்கிலும் வெளியானது.
தெலுங்கில் சுமார் 9 கோடிக்கு விற்கப்பட்ட படம் 22 கோடி வரை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். இதர செலவுகள் போக படத்தின் நிகர வசூல் 13 கோடி. இதன் காரணமாக இதுவரையிலும் சுமார் 4 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரடித் தெலுங்குப் படங்களுக்குப் போட்டியாக இந்த அளவிற்கு 'மாஸ்டர்' தெலுங்கில் வசூலித்தது பெரிய விஷயம் என்கிறார்கள்.
இப்படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட மகேஷ் கொனேரு இன்று விஜய்யை சந்தித்து தெலுங்கு வசூல் நிலவரம் குறித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பு பற்றி மகேஷ் டுவிட்டரில், “எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக விஜய்யை சந்தித்து 'மாஸ்டர்' படத்தின் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்தேன். தெலுங்கு மாநிலங்களில் திரைப்பட ரசிகர்கள் அன்பு செலுத்தியதற்கு விஜய் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் இனி விஜய்யின் படங்கள் மற்ற தமிழ் நடிகர்களை விடவும் பெரிய வியாபாரத்தை நோக்கிப் பயணிக்க 'மாஸ்டர்' வெற்றி உதவியுள்ளதாக கோலிவுட் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.